/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆமை வேகத்தில் மணிமுத்தாறு மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் மணிமுத்தாறு மேம்பாலம் கட்டும் பணி
ஆமை வேகத்தில் மணிமுத்தாறு மேம்பாலம் கட்டும் பணி
ஆமை வேகத்தில் மணிமுத்தாறு மேம்பாலம் கட்டும் பணி
ஆமை வேகத்தில் மணிமுத்தாறு மேம்பாலம் கட்டும் பணி
ADDED : ஜூலை 28, 2024 11:49 PM
திருவாடானை : மணிமுத்தாறு மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாடானை அருகே மாணிக்கம்கோட்டை கிராமத்திற்கு செல்லும் வழியில் மணிமுத்தாறில் நபார்டு திட்டத்தில் ரூ.8.82 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.
பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காங்., மாவட்ட துணைதலைவர் கடம்பூர் துரை.விஸ்வநாதன் கூறியதாவது:
இப்பாலம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் மாணிக்கம்கோட்டை, கடம்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட இப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. இன்னும் சில மாதங்களில் பருவமழை துவங்கும்.
அப்போது வெள்ளப்பெருக்கின் போது மணிமுத்தாறில் நீர் வரத்து அதிகரித்தால் 20 கிராமங்கள் துண்டிக்கபடும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் சிரமம் அடைந்தனர். ஆகவே மழைக் காலம் துவங்குவதற்கு முன் மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.