/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு
அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 10, 2024 11:10 PM
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டின் துவக்கத்தில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், நெற்றியில் திலகமிட்டும் வரவேற்றனர்.
பரமக்குடி அருகே சோமநாதபுரம் சவுராஷ்ட்ரா தேசிய நடுநிலைப் பள்ளியில் தாளாளர் குப்புசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி மாணவர்களுக்கு திலகமிட்டு மாலை அணிவித்தார்.
பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரோஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதே போல் பாரதியார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு திலகமிட்டு ஆசிரியர்கள் வரவேற்றனர்.