/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பண்ணை பள்ளி விவசாயிகளுக்குமண்வள அட்டை வழங்கும் விழா பண்ணை பள்ளி விவசாயிகளுக்குமண்வள அட்டை வழங்கும் விழா
பண்ணை பள்ளி விவசாயிகளுக்குமண்வள அட்டை வழங்கும் விழா
பண்ணை பள்ளி விவசாயிகளுக்குமண்வள அட்டை வழங்கும் விழா
பண்ணை பள்ளி விவசாயிகளுக்குமண்வள அட்டை வழங்கும் விழா
ADDED : ஜூலை 27, 2024 05:16 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே மாலங்குடி கிராமத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை, வேளாண் துறை இணைந்து டிஜிட்டல் பண்ணைப்பள்ளி விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கும் விழா நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாஸ்கரமணியன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினர். வேளாண் துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்)அமர்லால் மாநில அரசின் திட்டங்கள் குறித்தும், மண் வளங்களை பாதுகாப்பது குறித்தும் பேசினார்.
உதவி வேளாண் இயக்குனர் தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு நாகராஜன் மண்வள அட்டை பயன்படுத்தி உரங்கள் இடுவது, மானியத்தில் உரங்கள் மற்றும் விதைகள் வாங்குவது குறித்து விளக்கம் அளித்தார்.
திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மாவட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, திட்ட பணியாளர் ராமு செய்தனர்.--