/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கையெழுத்து இயக்கம் பரமக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
பரமக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
பரமக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
பரமக்குடியில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
ADDED : ஜூன் 21, 2024 04:15 AM

முதல்வருக்கு கோரிக்கை மனு
பரமக்குடி: பரமக்குடியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வருக்கு அனுப்பினர்.
காரைக்குடி மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். பரமக்குடி கிளை தலைவர் சிவானந்தம் வரவேற்றார்.
ஜூன் 17ல் துவங்கி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்டனர். 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் சூழலில் தொடர்ந்து தி.மு.க., கூட்டணி அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளோம்.
இந்நிலையில் ஊதிய ஒப்பந்தம் செப்.,2023 முதல் அமல்படுத்த வேண்டிய நிலையில் 15வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடித்திட வேண்டும். தொழிலாளர்களின் சம்பள பிடித்ததை உரிய இனங்களில் செலுத்த வேண்டும்.
ஒப்பந்த முறையில் காலி பணியிடம் நியமனம் செய்வதை விடுத்து முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். பழைய பஸ்கள் கழிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பரமக்குடி கிளை துணைச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.