/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொறியியல் தன்னாட்சி கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பணி குறித்த கருத்தரங்கம் பொறியியல் தன்னாட்சி கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பணி குறித்த கருத்தரங்கம்
பொறியியல் தன்னாட்சி கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பணி குறித்த கருத்தரங்கம்
பொறியியல் தன்னாட்சி கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பணி குறித்த கருத்தரங்கம்
பொறியியல் தன்னாட்சி கல்லுாரிகளில் பேராசிரியர்கள் பணி குறித்த கருத்தரங்கம்
ADDED : ஜூன் 02, 2024 03:27 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் தன்னாட்சி கல்லுாரிகளின் பேராசிரியர் மேம்பாட்டு மையம் சார்பில் பேராசிரியர்களின் பணி மற்றும் விளைவுகள் சார்ந்த கல்வி குறித்த கருத்தரங்கம் நடந்தது.
பேராசிரியர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் கிருபானந்தசாரதி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக துணை இயக்குநர் செந்தில்குமார், சிறப்பு அழைப்பாளர் பாஸ்கருக்கு கல்லுாரி முதல்வர் பெரியசாமி மரியாதை செய்து துவக்க உரையாற்றினார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் தலைவர் பாஸ்கர் பேசியதாவது:
பேராசிரியர்கள் அனைவரும் விளைவு சார்ந்த கல்வியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இதுனால் தரமான கல்வி நிறுவனமாக மாறி மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்க முடியும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை அளித்திட முடியும்.
தன்னாட்சி பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் தற்போது உள்ள வேலை வாய்ப்புக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை திருத்தியமைத்து மாணவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திட உறுதியேற்க வேண்டும் என்றார்.
மின்னியல் துறைத்தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பேராசிரியர் மேம்பாட்டு மையத்தின் பேராசிரியர்கள் செய்திருந்தனர். அனைத்து பேராசிரியர்களும் இதில் பங்கேற்றனர்.