/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கமுதி கிளை நுாலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு; தாசில்தார் தகவல் கமுதி கிளை நுாலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு; தாசில்தார் தகவல்
கமுதி கிளை நுாலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு; தாசில்தார் தகவல்
கமுதி கிளை நுாலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு; தாசில்தார் தகவல்
கமுதி கிளை நுாலகத்திற்கு விரைவில் இடம் தேர்வு; தாசில்தார் தகவல்
ADDED : ஜூன் 14, 2024 10:24 PM
கமுதி : கமுதி கிளை நுாலகத்திற்கு புதிதாக கட்டடம் கட்டுவதற்கு நிரந்தரமாக இடம் தேர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் சேதுராமன் கூறினார்.
கமுதி கிளை நுாலகம் கடந்த 1954ம் ஆண்டு துவக்கப்பட்டு 70 ஆண்டுகளாக வாடகை கட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
போதுமான இட வசதி இல்லாமல் ஏராளமான புத்தகங்களை வெளியில் வைக்க முடியாமல் சாக்கு மூடையில் கட்டி வைக்கப்படும் சூழ்நிலை உள்ளது.
மழைக் காலங்களில் கட்டடம் ஒழுவதால் ஏராளமான புத்தகம் வீணாகும் அபாயம் உள்ளது. அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளனர்.
ஒவ்வொரு ஊராட்சிகளில் உள்ள கிராமப்புற நூலகங்கள் பூட்டப்பட்டு உள்ளது. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கிளை நுாலகத்தை நாடி வருகின்றனர்.
சொந்த கட்டடங்கள் இல்லாததால் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. ஒருசில நேரங்களில் நுாலகத்தை தேடி அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
கமுதி கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அரசுக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து வழங்க வேண்டும் என்று கமுதி தாசில்தாருக்கு ராமநாதபுரம் மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோவன் கடிதம் அனுப்பினார்.
தாசில்தார் சேதுராமன் கூறுகையில், கமுதி அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் கமுதி கிளை நுாலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசு சொந்தமான இடங்கள் ஆய்வு செய்து கூடிய விரைவில் இடம் தேர்வு செய்து ஒப்படைக்கப்படும் என்றார்.