/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெரியபட்டினத்தில் நாளை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா பெரியபட்டினத்தில் நாளை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா
பெரியபட்டினத்தில் நாளை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா
பெரியபட்டினத்தில் நாளை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா
பெரியபட்டினத்தில் நாளை மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா
ADDED : ஜூன் 22, 2024 05:02 AM
பெரியபட்டினம்: -பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் 123 ஆம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா நாளை(ஜூன் 23) நடக்க உள்ளது.
ஜூன் 13 மாலை 5:00 மணிக்கு மேல் ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசல் திடலில் இருந்து மின்னொளியால் அலங்கரிக்கப்பட்ட ரதம் வந்தது. குதிரைகள் நாட்டியமாட ஒட்டகத்தின் மீது பச்சை வண்ண பிறை கொடி கொண்டு வரப்பட்டு தர்கா அருகே உள்ள 70 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
உலக நன்மைக்காக மவுலீது (புகழ் மாலை) ஓதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்காவில் பச்சை வண்ண போர்வை போர்த்தி மல்லிகை பூச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டது. நாளை (ஜூன் 23) மாலை சந்தனக்கூடு விழா கோலாகலமாக துவங்குகிறது.
அன்று இரவு முதல் மறுநாள் வரை தொடர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பள்ளிவாசலில் இருந்து அதிகாலையில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு தர்காவில் புனித சந்தனம் பூசப்படுகிறது. பகலில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடக்கிறது. ஜூலை 3ல் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை சந்தனக்கூடு விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.