/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு தள்ளி வைப்பு நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு தள்ளி வைப்பு
நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு தள்ளி வைப்பு
நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு தள்ளி வைப்பு
நடிகர் சீனிவாசன் மீதான ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கு தள்ளி வைப்பு
ADDED : ஜூலை 10, 2024 05:15 AM
ராமநாதபுரம், ; ரூ.14 லட்சம் செக் மோசடி வழக்கில் ராமநாதபுரம் கோர்ட்டில் சினிமா நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணை ஜூலை 16 க்கு தள்ளி வைக்கப்பட்டது.
தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முனியசாமி 60. இறால் பண்ணை, உப்பளத் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக ரூ.15 கோடி கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்துள்ளார். இதனை அறிந்த சினிமா நடிகர் சீனிவாசன் தான் கடன் வாங்கி தருவதாக கூறி அதற்காக ரூ.15 லட்சம் முத்திரை கட்டணம் செலுத்த வேண்டும் என்று முனியசாமியிடம் ரூ.15 லட்சம் வாங்கி உள்ளார்.
இந்த தொகையை பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன் கடன் வாங்கித்தராமல் ஏமாற்றியதோடு ரூ.14 லட்சத்திற்கான காசோலை வழங்கியுள்ளார். அந்த காசோலையை முனியசாமி வங்கியில் செலுத்திய போது பணம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டது.
இதுதொடர்பாக முனியசாமி ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் -1ல் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை. இதையடுத்து மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வழக்கு விசாரணையை ஜூலை 16க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.