/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எச்சரிக்கை பலகையின்றி விபத்து அபாயம் எச்சரிக்கை பலகையின்றி விபத்து அபாயம்
எச்சரிக்கை பலகையின்றி விபத்து அபாயம்
எச்சரிக்கை பலகையின்றி விபத்து அபாயம்
எச்சரிக்கை பலகையின்றி விபத்து அபாயம்
ADDED : மார் 12, 2025 01:15 AM

கமுதி; முதுகுளத்துார் கமுதி ரோடு கோட்டைமேடு அருகே அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலையில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கமுதி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்துார் கமுதி ரோடு கோட்டைமேடு அருகே துவங்கி பார்த்திபனுார் அருப்புக்கோட்டை ரோட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது தார் ரோடு அமைக்கும் பணி முடிவு பெற உள்ள நிலையில் மும்மரமாக நடக்கிறது.
முதுகுளத்துார் கமுதி ரோடு கோட்டைமேடு அருகே புறவழிச்சாலை செல்லும் பகுதியில் பிரிந்து செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ரோட்டில் எச்சரிக்கை பலகை இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரோட்டில் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.