/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எஸ்.இலந்தைக்குளம் செல்லும் ரோட்டில் விபத்து அபாயம் எஸ்.இலந்தைக்குளம் செல்லும் ரோட்டில் விபத்து அபாயம்
எஸ்.இலந்தைக்குளம் செல்லும் ரோட்டில் விபத்து அபாயம்
எஸ்.இலந்தைக்குளம் செல்லும் ரோட்டில் விபத்து அபாயம்
எஸ்.இலந்தைக்குளம் செல்லும் ரோட்டில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 07, 2024 11:07 PM

சாயல்குடி : சாயல்குடி அருகே எஸ்.இலந்தைக்குளம் செல்லும் வழியில் கடந்த டிச., மாதம் பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு ரோடு சேதமடைந்தது.
சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை செக்போஸ்ட்டில் இருந்து வி.வி.ஆர்.நகர், எஸ்.இலந்தைகுளம் செல்லும் மும்முனை சந்திப்பில் ரோட்டின் நடுவே பெரிய பள்ளம் தோண்டப்பட்டு அதன் வழியாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் அவற்றை முறையாக பராமரிக்காமல் விட்டதால் அப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளது. பெயரளவிற்கு கட்டடக்கழிவுகளை கொட்டி சமன் செய்துள்ளனர்.
இதன் அருகே 6 அடி ஆழத்தில் மெகா பள்ளம் உள்ளதால் இரவு நேரங்களில் அப்பகுதியில் போதிய வெளிச்சம் இன்றி வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து வி.வி.ஆர்., நகர் செல்லும் வழியில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.