Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்மானம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்மானம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்மானம்

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீர்மானம்

ADDED : ஜூலை 01, 2024 05:57 AM


Google News
தொண்டி : கிழக்கு கடற்கரை ரோட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது.

துணைத்தலைவர் அழகுராணி, செயல் அலுவலர் மகாலிங்கம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு கடற்கரை ரோட்டில் இரு பக்கமும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்துள்ளதால் விபத்துகள் அதிகரித்துள்ளது.

ஆகவே மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை, ராமநாதபுரம், பட்டுகோட்டை ரோடுகளில் கூடுதலாக மின் விளக்குகள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வட்டாணம் ரோட்டில் பழைய போலீஸ்ஸ்டேஷன் இருந்த இடத்தை பேரூராட்சிக்கு நிலமாற்றம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பேரூராட்சி சார்பில் பராமரிக்க அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அழகப்பா கல்லுாரியில் மாலை நேர கல்லுாரி துவங்கப்பட்டதற்கும், தொண்டியில் தினசரி சந்தை மற்றும் கடற்கரை பூங்கா அமைக்க அனுமதி வழங்கியதற்கும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us