/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிடங்கூர்- இலஞ்சியமங்கலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை கிடங்கூர்- இலஞ்சியமங்கலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
கிடங்கூர்- இலஞ்சியமங்கலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
கிடங்கூர்- இலஞ்சியமங்கலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
கிடங்கூர்- இலஞ்சியமங்கலம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 05:42 AM

திருவாடானை : திருவாடானை அருகே கிடங்கூர், இலஞ்சியமங்கலம் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இரு கிராமங்களுக்கும் இடையில் ஆறு செல்கிறது. மழைக் காலங்களில் இந்த ஆற்றில் தண்ணீர்செல்லும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
கிடங்கூர் மக்கள் கூறியதாவது:
கிடங்கூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் இலஞ்சியமங்கலத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மழை காலத்தில் ஆற்றில் தண்ணீர் செல்லும் போது மாணவர்கள் பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டில் இருந்து விடுகின்றனர்.
தண்ணீர் பல நாட்கள் செல்வதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இங்கு தரைப்பாலம் அமைக்கவேண்டும் என்று லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு நோட்டிஸ் ஒட்டினோம்.
அதிகாரிகள் வந்து தரைபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.