/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு
கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு
கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு
கோட்டைமேடு தர்ஹாவில் மத நல்லிணக்க வழிபாடு
ADDED : ஜூலை 18, 2024 10:40 PM
கமுதி: கமுதி கோட்டைமேட்டில் மகான் கருணையானந்தா ஞான பூபதிகள் முகமது இப்ராஹிம்ஷா தர்ஹா உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மதநல்லிணக்க வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹிந்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர்தர்ஹாவில் குத்துவிளக்கு ஏற்றியும், தேங்காய் சூடம், உணவு படையலிட்டு சிறப்பு பூஜை செய்தனர். இஸ்லாமிய மதத்தினர் சர்க்கரை, லட்டு, பேரிச்சம்பழம், ஊதுபத்தி, மல்லிகைப்பூ ஆகியவற்றுடன் குர்-ஆன் வாசித்து தொழுகை நடத்தினர்.
இதில் ஹிந்து, இஸ்லாமிய மக்கள் இணைந்து மத நல்லிணக்க வழிபாடு நடத்தினர்.
வழிபாட்டில் பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.