/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் ஆஜர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் ஆஜர்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் ஆஜர்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் ஆஜர்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் ஆஜர்
ADDED : ஜூன் 15, 2024 01:59 AM

ராமநாதபுரம்:-ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள் சேம நல நிதியில் நடந்த ரூ.ஒரு கோடி மோசடி வழக்கில் முன்னாள் இணை ஆணையர் உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜராயினர்.
குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கு வழக்கை ஜூலை 12 க்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.
இக்கோயில் ஊழியர்கள் சேம நல நிதி கணக்கில் செலுத்த வேண்டிய ரூ.ஒரு கோடி பணத்தை மோசடி செய்ததாக தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிவன் அருள் குமரன், கணக்கர் ரவீந்திரன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர்.
வழக்கை 2020ல் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது.
அவர்கள் விசாரணையில் ராமநாதபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் கோயில் பெயரில் நன்கொடைக்காக அனுமதியின்றி கணக்கு துவங்கி மோசடி செய்ததும், கணக்கு துவங்க முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ் கையெழுத்திட்டதும் தெரிய வந்தது.
இந்த கணக்கில் இருந்து சிவன் அருள்குமரன் தன் தந்தை கோபால் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி.,யினர் சிவன் அருள் குமரன், ரவீந்திரன், செல்வராஜ், கோபால் மீது வழக்குப்பதிந்தனர். 2000 பக்கத்திற்கு மேல் குற்றப்பத்திரிக்கை தயாரித்து ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2 ல் ஏற்கனவே தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிவன் அருள் குமரன், தந்தை கோபால், முன்னாள் இணை ஆணையர் செல்வராஜ், கணக்கர் ரவீந்திரன் ஆஜராயினர்.
மாஜிஸ்திரேட் பிரபாகரன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்க விசாரணையை ஜூலை 12 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.-------