Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை ரோடு சேதம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை ரோடு சேதம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை ரோடு சேதம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை ரோடு சேதம்: பக்தர்கள் அவதி

ADDED : ஜூலை 22, 2024 04:47 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை தார் சாலை சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட், கோயில் மேலவாசல் வழியாக அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் நகராட்சி சாலை ஓரத்தில் உள்ள கோயில் கார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தி விட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள்.

இந்த தார் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதால், இது முக்கிய வழித்தடமாக உள்ளது.

ஆனால் சாலை பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்தும், குண்டும் குழியுமாக கிடப்பதால் வாகன டயர்கள் சேதமடைந்தும், சிலசமயம் டயர்கள் வெடிப்பதால், உரிய நேரத்தில் திரும்பிச் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

மேலும் இரவில் டூவீலில் செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

எனவே முக்கியமான இச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us