/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
சாட்சி சொல்ல வராத தாம்பரம் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்
ADDED : ஜூன் 16, 2024 01:58 AM
ராமநாதபுரம்:சிறுமி திருமண வழக்கில் சாட்சி சொல்ல வராத தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப் பட்டது.
ராமநாதபுரம் அருகே உத்தரவை கிராமத்தை சேர்ந்த முனியசாமி மகன் சேதுராமன் 32. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் 2022ல் தனது உறவினரின் 15 வயது சிறுமியை பெற்றோர் இல்லாததால் ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து ராமநாதபுரம் கோயிலில் திருமணம் செய்தார்.
பின் அந்த சிறுமியுடன் கோவையில் குடும்பம் நடத்தினார். சிறுமியின் பாதுகாவலர்கள் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தனர். அப்போதைய இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் சேதுராமனை கைது செய்தார்.
இந்த வழக்கு ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடக்கிறது.
விசாரணை அதிகாரியான பாலமுரளி சுந்தரம் சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு தொடர்ந்து வராததால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
பாலமுரளி சுந்தரம் தற்போது சென்னை தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.