/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற வழக்கறிஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார் ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற வழக்கறிஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற வழக்கறிஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற வழக்கறிஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற வழக்கறிஞர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
ADDED : ஜூலை 11, 2024 05:01 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் மத்திய அரசின் சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ரயில் மறியல் செய்ய முயன்ற ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்கள் கணடித்து ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றனர். ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் ேஷக் இப்ராஹிம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு. மூத்த வழக்கறிஞர்கள் அழகு பாலகிருஷ்ணன், குணசேகரன், ரவிச்சந்திர ராமவன்னி, மகளிர் அணி மனோரஞ்சிதம், உஷா, பரமக்குடி வழக்கறிஞர் சங்கத்தலைவர் பூமிநாதன், செயலாளர் பசுமலை, திருவாடானை தலைவர் சிவராமகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் 120 பேர் பங்கேற்றனர்.
மத்திய அரசின் சட்ட திருத்தங்களை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர்சேக் இப்ராஹிம் கூறுகையில், மாவட்டத்தில் வழங்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்திய அரசின் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் வழக்கறிஞர்கள் உட்பட வக்கீல் சங்க நிர்வாகிகள் ரயில் மறியல் போராட்டத்திற்கு வந்திருந்தனர்.
ஜூலை 12 வரை தொடர்ந்து போராட்டம் நடக்கவுள்ளது என்றார்.-----