/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ காற்றில் முறிந்த மரக்கிளைகள் மின்தடையால் மக்கள் அவதி காற்றில் முறிந்த மரக்கிளைகள் மின்தடையால் மக்கள் அவதி
காற்றில் முறிந்த மரக்கிளைகள் மின்தடையால் மக்கள் அவதி
காற்றில் முறிந்த மரக்கிளைகள் மின்தடையால் மக்கள் அவதி
காற்றில் முறிந்த மரக்கிளைகள் மின்தடையால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 22, 2024 04:49 AM

பரமக்குடி: பரமக்குடியில் நேற்று பலத்த காற்றால் மரங்கள் சாய்ந்த நிலையில், நகர் மற்றும் கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் மக்கள் சிரமப்பட்டனர்.
பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த காற்று வீசியது.
இந்நிலையில் பரமக்குடி தலைமை தபால் நிலையம் அருகில் பெரிய மரம் சாய்ந்ததில், உயர்ந்த மின் கம்பிகள் மீது விழுந்து மின் கம்பம் சாய்ந்தது.
மேலும் காட்டுபரமக்குடி உப மின் நிலையம் அருகில் உள்ள செடி, கொடிகள் தீ பற்றிய நிலையில், தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.
இதன் காரணமாக நேற்று காலை 11:00 மணி தொடங்கி மாலை 5:00 மணி வரை நகர் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
சில பகுதிகளில் 3 மணி நேரம் முதல் 6 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது. இதனால் மக்கள் அன்றாட பணிளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர்.