/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்றகட்டுமானப் பணி குறித்து மக்கள் புகார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்றகட்டுமானப் பணி குறித்து மக்கள் புகார்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்றகட்டுமானப் பணி குறித்து மக்கள் புகார்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்றகட்டுமானப் பணி குறித்து மக்கள் புகார்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமற்றகட்டுமானப் பணி குறித்து மக்கள் புகார்
ADDED : ஜூன் 25, 2024 11:06 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் தரமின்றி கட்டப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
ஆர்.காவனுாரில் நயினார்கோவில் மெயின் ரோட்டோரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் சேதமடைந்துள்ளது. இதற்கு பதில் அருகில் புதிதாக ரூ.1கோடியே 25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிக்கு தரமற்ற செங்கல், கம்பிகளைப் பயன்படுத்துகின்றனர்.
ரோட்டை விட தாழ்வாக பேஸ்மட்டம் உள்ளது என புகார் தெரிவித்து காவனுார் ஊராட்சி தலைவர் கமலா, ஊர் மக்கள் கட்டுமானப்பணி நிறுத்தக்கோரியும், தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி மெயின் ரோட்டை விட 3 அடி உயரத்தில் பேஸ்மட்டம் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.