/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் பெயர்ந்து விழும் கூரையால் மக்கள் அச்சம் அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் பெயர்ந்து விழும் கூரையால் மக்கள் அச்சம்
அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் பெயர்ந்து விழும் கூரையால் மக்கள் அச்சம்
அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் பெயர்ந்து விழும் கூரையால் மக்கள் அச்சம்
அரசு மருத்துவமனை பழைய கட்டடத்தில் பெயர்ந்து விழும் கூரையால் மக்கள் அச்சம்
ADDED : ஜூன் 03, 2024 03:01 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பழைய கட்டடத்தில் கூரை கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுவதால் அச்சத்துடன் நோயாளிகள் உள்ளனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.பழைய கட்டடத்திலும் இன்னும் பல இடங்கள் பயன்பாட்டில் உள்ளன. எக்ஸ்ரே மையம், நோயாளிகள் வார்டுகள், அறுவை சிகிச்சை அரங்குகள் பழைய கட்டடத்தில் இயங்குகின்றன.
வெளி நோயாளிகளுக்குசீட்டு வழங்கும் இடத்தில் கூரையில் இருந்த கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது.பழைய கட்டடம் பராமரிப்பு இல்லாததால் இந்த கட்டடத்தின் கான்கிரீட்டுகள் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் பல இடங்களில் உள்ளன.
இதனால் இப்பகுதியில் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் பழைய கட்டடங்களை பராமரிக்க வேண்டும்.