/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சைக்கு... நோயாளிகள் அலைக்கழிப்பு டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சைக்கு... நோயாளிகள் அலைக்கழிப்பு
டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சைக்கு... நோயாளிகள் அலைக்கழிப்பு
டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சைக்கு... நோயாளிகள் அலைக்கழிப்பு
டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சைக்கு... நோயாளிகள் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 18, 2024 05:29 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் இல்லாததால் கண் அறுவை சிகிச்சை செய்ய நோயாளிகளை அலைக்கழிப்பு செய்கின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில் கண் சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நான்கு டாக்டர்கள் இருந்தனர்.
இதில் ஒருவர் துாத்துக்குடிக்கு பணியிட மாறுதல் பெற்று சென்று விட்டார். மற்றொரு டாக்டர் எந்த தகவலும் இல்லாமல் பணிக்கு வருவதில்லை.
இன்னொரு டாக்டர் நீண்ட நாள் விடுப்பில் சென்றுவிட்டார். தற்போது பணியில் இருப்பது ஒரு டாக்டர் மட்டுமே என்பதால் புற நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண் அறுவை சிகிச்சைகள் ஒரு மாதமாக நடக்கவில்லை.
இதனால் கண் அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கும் நோயாளிகள் பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கோ, மதுரை அரசு மருத்துவமனைக்கோ அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பரமக்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடக்கும் நிலையில் உயர் தகுதி படைத்த ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண் மருத்துவப்பிரிவில் தினமும் குறைந்தது 80 முதல் 100 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருகின்றனர். இதில் 30 முதல் 40 பேர் வரை கேட்ராக்ட் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கண் அறுவை சிகிச்சைக்காக அலைக்கழிப்பு செய்யப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் கண் சிகிச்சை பிரிவை முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.