/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாதி வழியில் பஞ்சராகும் பஸ்சால் பயணிகள் அவதி பாதி வழியில் பஞ்சராகும் பஸ்சால் பயணிகள் அவதி
பாதி வழியில் பஞ்சராகும் பஸ்சால் பயணிகள் அவதி
பாதி வழியில் பஞ்சராகும் பஸ்சால் பயணிகள் அவதி
பாதி வழியில் பஞ்சராகும் பஸ்சால் பயணிகள் அவதி
ADDED : ஜூலை 10, 2024 07:02 AM

முதுகுளத்துார், : முதுகுளத்தூர் -சாயல்குடி ரோடு கீழச்சாக்குளம் அருகே சென்ற 3ம் எண் அரசு டவுன் பஸ் பஞ்சர் ஆனதால் நடுவழியில் பொதுமக்கள் தவித்தனர்.
முதுகுளத்துாரில் இருந்து இளஞ்செம்பூர், வீரம்பல், மேலச்சிறுபோது, பூலாங்குளம் வழியாக சிக்கல் வரை 3ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை சிக்கலில் இருந்து முதுகுளத்துாருக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் சென்றனர்.
அப்போது முதுகுளத்துார்--சாயல்குடி ரோடு கீழச்சாக்குளம் அருகே பஸ் பஞ்சர் ஆனது. இதையடுத்து நடுவழியில் பயணம் செய்தவர்கள் சிரமப்பட்டனர். இதனால் பயணிகள் இவ்வழியே சென்ற டூவீலர் மற்றும் பஸ்களில் சென்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். பாதி வழியில் அரசு பஸ்கள் பஞ்சராகி நிற்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் கூறுகையில், பணிமனையில் இருந்து புறப்படும் போது அரசு பஸ்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்பகுதியில் ஓடும் பல டவுன் பஸ்கள் ஓட்டை உடைசலாக உள்ளன. எனவே இனிவரும் காலங்களில் பஸ்களை முறையாக ஆய்வு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.