/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி, எமனேஸ்வரம் ரோடு பள்ளம் சீரமைப்பு பரமக்குடி, எமனேஸ்வரம் ரோடு பள்ளம் சீரமைப்பு
பரமக்குடி, எமனேஸ்வரம் ரோடு பள்ளம் சீரமைப்பு
பரமக்குடி, எமனேஸ்வரம் ரோடு பள்ளம் சீரமைப்பு
பரமக்குடி, எமனேஸ்வரம் ரோடு பள்ளம் சீரமைப்பு
ADDED : ஜூலை 10, 2024 06:55 AM

பரமக்குடி : பரமக்குடியில் இருந்து எமனேஸ்வரம் செல்லும் விலக்கு ரோடு பள்ளங்கள் சரி செய்யப்பட்ட நிலையில் தொடர் சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரமக்குடியில் இருந்து இளையான்குடி செல்லும் எமனேஸ்வரம் பகுதியில் மஞ்சள்பட்டிணம், வைகை நகர், புது நகர் என மூன்று வார்டுகள் உள்ளன. இப்பகுதி சிவகங்கை மாவட்டம் செல்லும் சந்திப்பு ரோடு இணைகிறது.
இதனால் பள்ளி நேரங்களில் மட்டுமல்லாது அவ்வப்போது தொடர் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அபாயகரமான வளைவில் விபத்து அச்சம் உள்ள நிலையில் ரோட்டோரங்களில் பள்ளங்கள் காணப்பட்டன.
இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ரோட்டோரம் இருந்த பள்ளங்களை சீரமைத்தனர். மேலும் வரும் நாட்களில் அடுத்தடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.