/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி: ஐயப்ப சுவாமி உத்திர நட்சத்திர பூஜை பரமக்குடி: ஐயப்ப சுவாமி உத்திர நட்சத்திர பூஜை
பரமக்குடி: ஐயப்ப சுவாமி உத்திர நட்சத்திர பூஜை
பரமக்குடி: ஐயப்ப சுவாமி உத்திர நட்சத்திர பூஜை
பரமக்குடி: ஐயப்ப சுவாமி உத்திர நட்சத்திர பூஜை
ADDED : ஜூன் 16, 2024 04:47 AM

பரமக்குடி: பரமக்குடி சக்தி குமரன் செந்திலாண்டவர் கோயிலில் உத்திரம் நட்சத்திரத்தில் ஐயப்ப சுவாமிக்கு ஆராதனைகள் நடந்தது.
ஒவ்வொரு உத்திரம் நட்சத்திரத்திலும் சுவாமி ஐயப்பன் அவதார தினத்தில் அனைத்து கோயில்களிலும் உத்திர நட்சத்திர பூஜை நடப்பது வழக்கம்.இதன்படி பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறை சக்தி குமரன் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
தொடர்ந்து சரண கோஷம் நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.