/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பொழுதுபோக்க இடம் இன்றி பரமக்குடி சிறுவர்கள் ஏக்கம்; நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா... பொழுதுபோக்க இடம் இன்றி பரமக்குடி சிறுவர்கள் ஏக்கம்; நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா...
பொழுதுபோக்க இடம் இன்றி பரமக்குடி சிறுவர்கள் ஏக்கம்; நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா...
பொழுதுபோக்க இடம் இன்றி பரமக்குடி சிறுவர்கள் ஏக்கம்; நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா...
பொழுதுபோக்க இடம் இன்றி பரமக்குடி சிறுவர்கள் ஏக்கம்; நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா...
ADDED : ஜூன் 07, 2024 11:01 PM

பரமக்குடி : பரமக்குடியில் பொழுது போக்கு மற்றும் விளையாடுவதற்கு இடமின்றி சிறுவர்கள் தவிக்கும் நிலையில் நகராட்சி பூங்கா புத்துயிர் பெறுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சி மாவட்டத்திலேயே 36 வார்டுகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரிய நகராட்சியாக உள்ளது. பெரிய நகராட்சி என்ற பெயரை மட்டுமே தாங்கி நிற்கும் இங்கு எந்த ஒரு பொழுது போக்கு அம்சமும் இல்லாத நிலையே உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி, பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து மருத்துவமனை ரோட்டில்பூங்கா ஒன்றை உருவாக்கினர். அப்போது துவங்கி பெரிய அளவில் வரவேற்பு பெற்ற பூங்கா காலப்போக்கில் எந்த பராமரிப்பும் இல்லாமல் வீணாகியது.
ஆரம்ப நிலையில் அமைக்கப்பட்ட அதே விளையாட்டு உபகரணங்கள் உடைந்து சிறுவர்களை காயப்படுத்துகின்றன. மேலும் அவ்வப்போது பராமரிப்பு என்ற பெயரில் புதிய உபகரணங்கள் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டாலும் முறைப்படுத்தாமல் உள்ளனர். இங்குள்ள கழிப்பறையில் தண்ணீரின்றி பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மேலும் பூங்காவை சுற்றியிலும் குப்பை கொட்டப்பட்டும், இறைச்சி கடைகளால் கழிவுகள் நிரம்பியும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இங்கு வரும் குழந்தைகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
தொடர்ந்து சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நிலை மட்டும் இருக்கிறது. ஆகவே சிறுவர்களின் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்த பூங்காவை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.