/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பள்ளிகள் திறப்பு; இனிப்பு வழங்கி மாணவரை வரவேற்ற ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பு; இனிப்பு வழங்கி மாணவரை வரவேற்ற ஆசிரியர்கள்
பள்ளிகள் திறப்பு; இனிப்பு வழங்கி மாணவரை வரவேற்ற ஆசிரியர்கள்
பள்ளிகள் திறப்பு; இனிப்பு வழங்கி மாணவரை வரவேற்ற ஆசிரியர்கள்
பள்ளிகள் திறப்பு; இனிப்பு வழங்கி மாணவரை வரவேற்ற ஆசிரியர்கள்
ADDED : ஜூன் 10, 2024 11:16 PM

ராமநாதபுரம் : கோடை விடுமுறைக்கு பின் நேற்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. அரசுப்பள்ளிகளில் மாலை அணிவித்து சந்தனமிட்டும், இனிப்பு வழங்கியும் மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1026 துவக்கப்பள்ளிகள், 208 நடுநிலைப்பள்ளிகள், 113 உயர்நிலைப் பள்ளிகள், 173 மே.நி., பள்ளிகள் என 1524 அரசுப்பள்ளிகள் உள்ளன.
கோடை விடுமுறை முடிந்து நேற்று (ஜூன் 10ல்) ஒன்று முதல் பிளஸ் 2 வரையில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அரசு, தனியார் பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. புதிய மாணவர்களை சந்தனப் பொட்டிட்டும், சாக்லெட் கொடுத்து வரவேற்றனர்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் ராமநாதபுரம் நகராட்சி வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியல் ஆய்வு செய்தார்.
முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பரமக்குடி, சத்திரக்குடி பள்ளிகளில் வசதிகள், மாணவர்கள் வருகை குறித்து ஆய்வு செய்தார். கடந்தாண்டை போல இவ்வாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.