/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கிளை சிறையில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு கிளை சிறையில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
கிளை சிறையில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
கிளை சிறையில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
கிளை சிறையில் குடிநீருக்கு ஆர்.ஓ., பிளான்ட் திறப்பு
ADDED : ஜூலை 07, 2024 01:54 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடத்தில் கிளை சிறைச்சாலை செயல்படுகிறது.
இங்கு 30க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் தங்கும் வசதி உள்ளது. பல ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் விலைக்கு வாங்கி சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து முதுகுளத்துார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் முதுகுளத்துார் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சிறைக் கைதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிதாக ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான், செயல் அலுவலர் செல்வராஜ், வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
சார்பு நீதிபதி ராஜகுமார் நிரந்தர குடிநீர் இணைப்பை துவக்கி வைத்தார்.
உடன் செயலாளர் சிவராமகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் முனியசாமி, சிறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வன் உட்பட வழக்கறிஞர்கள், வட்ட சட்ட பணிகள் குழு நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
கிளைச் சிறையில் கைதிகளுக்கு நீண்ட நாள் கோரிக்கைக்கு முதுகுளத்துார் வட்ட சட்டப் பணிகள் குழுவால் நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.