Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அங்கன்வாடி மையங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அங்கன்வாடி மையங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அங்கன்வாடி மையங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

அங்கன்வாடி மையங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஜூலை 09, 2024 04:44 AM


Google News
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ளன.

உத்தரகோசமங்கை, ஆலங்குளம், நல்லிருக்கை உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்களில் வினியோகம் செய்யப்படும் உணவுப் பொருள்களான தட்டைப்பயிறு, கொண்டைக்கடலை, துவரம் பருப்பு ஆகியவற்றில் பூச்சிகள், வண்டுகள் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நல்லிருக்கையைச் சேர்ந்த பா.ஜ., விருந்தோம்பல் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் கூறியதாவது:

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஒரு வயது முதல் 5 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள் வருகின்றனர். வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உணவுப் பொருள்களான தட்டைப்பயிறு, கொண்டைகடலை, துவரம் பருப்பு ஆகியவற்றில் தரமற்று இருப்பதால் அவற்றை சமைக்கும் போது அலர்ஜி உள்ளிட்ட உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. வழங்கப்படும் முட்டைகளும் தரமற்றதாக உள்ளன.

முறையாக நாப்கின்கள் வழங்குவதில்லை. பெரும்பாலான மையங்களுக்கு உரிய முறையில் ஊட்டச்சத்து மாவு வழங்கப்படாமல் மொத்தமாக வெளியே வெளிச்சந்தைக்கு விற்பனை செய்யும் போக்கு தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us