/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சத்துணவு திட்டம் சிறப்பு வார்டு சபை சத்துணவு திட்டம் சிறப்பு வார்டு சபை
சத்துணவு திட்டம் சிறப்பு வார்டு சபை
சத்துணவு திட்டம் சிறப்பு வார்டு சபை
சத்துணவு திட்டம் சிறப்பு வார்டு சபை
ADDED : ஜூலை 05, 2024 10:38 PM
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளியில் சத்துணவு திட்டம் குறித்து சிறப்பு வார்டு சபை நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார்.தாளாளர் சாகுல்ஹமீது, செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி வரவேற்றார். சத்துணவு திட்டத்தில் சமூக தணிக்கை செய்து அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பின்பு சத்துணவு திட்டத்தின் பயன்கள், செயல்பாடுகள், மாணவர்கள் அனைவரும் சத்துணவு திட்டத்தை பயன்படுத்த வேண்டும் உட்பட மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வை வட்டார வள அலுவலர்கள் அந்தோணியம்மாள், வில்லியம் தாக்கல் செய்தனர்.
சத்துணவு மேற்பார்வையாளர் அன்னக்கிளி நன்றி கூறினார். பெற்றோர்கள்,சத்துணவு பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.