/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு
அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு
அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு
அரிச்சல்முனை கடற்கரையில் வடமாநில சிறுமி மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 03:17 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே அரிச்சல்முனை கடற்கரையில் உறவினர்கள் விட்டுச் சென்றதால் தவித்த வட மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அரிச்சல்முனை கடற்கரையில் நேற்று முன் தினம் மாலை உறவினர்கள் விட்டுச் சென்ற நிலையில் சிறுமி தவித்துள்ளார். அங்கு இருந்த ஆட்டோ டிரைவர்கள் சிறுமியை மீட்டு ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் அவரது உறவினர்களை தேடினர். ஆனால் யாரும் இல்லாததால் ராமேஸ்வரம் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவினரிடம் சிறுமியை டிரைவர்கள் ஒப்படைத்தனர்.
சிறுமியை விசாரித்ததில் அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அங்குள்ள பள்ளியில் 6 ம் வகுப்பு படிப்பதும் தெரிய வந்தது. சிறுமியின் பெற்றோர் இறந்த நிலையில் சித்தப்பா வீட்டில் வளர்ந்துள்ளார்.
சித்தப்பா சிறுமியை அழைத்து வந்து ராமேஸ்வரம் அரிச்சல்முனை பகுதியில் விட்டு சென்றது தெரிய வந்தது. குழந்தைகள் நலக்குழுவினர் சிறுமியை ராமநாதபுரம் அன்னை சத்யா குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர்.