/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி நகராட்சியில் எரியாத மின் விளக்குகள் பரமக்குடி நகராட்சியில் எரியாத மின் விளக்குகள்
பரமக்குடி நகராட்சியில் எரியாத மின் விளக்குகள்
பரமக்குடி நகராட்சியில் எரியாத மின் விளக்குகள்
பரமக்குடி நகராட்சியில் எரியாத மின் விளக்குகள்
ADDED : ஜூலை 18, 2024 04:40 AM

பரமக்குடி, பரமக்குடியில் உள்ள பல்வேறு தெருக்களில் நகராட்சி மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால் இருளில் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு கடந்த மாதங்களில் டியூப் லைட் தெரு விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டு நவீன எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு தெரு மற்றும் சந்துப் பகுதிகள் அதிக வெளிச்சம் கிடைக்கிறது. மேலும் வைகை ஆறு சர்வீஸ் ரோட்டிலும் புதிய மின்கம்பம் நடப்பட்டு இதே போன்ற விளக்குகள் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து முக்கிய சந்திப்பு இடங்களில் எல்.இ.டி., ஹைமாஸ் விளக்குகள் நிறுவப்பட்டது. ஆனால் இது போன்ற எல்.இ.டி.,விளக்குகள் ஆங்காங்கே திடீர் திடீரென எரியாமல் உள்ளது. பரமக்குடி பெரிய பஜார், முத்தாலம்மன் கோயில் சந்திப்பு இருளில் மூழ்கி உள்ளது. அதே இடத்தில் ஹைமாஸ் விளக்குகள் ஆறு உள்ள நிலையில் ஒன்று மட்டுமே எரிகிறது.
மேலும் சர்வீஸ் ரோட்டில் கடந்த ஒரு மாதமாக தரைப்பாலம் அருகில் ஐந்துக்கும் மேற்பட்ட விளக்குகள் எரியவில்லை. இதே போல் பல தெருக்களில் ஆங்காங்கே சில இடங்களில் எல்.இ.டி., விளக்குகள் எரியாததால் ஒட்டுமொத்தமாக இருள் சூழ்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக மின்விளக்குகளை அதன் உத்தரவாத காலத்தில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.