/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழி இல்லை: கொசுத்தொல்லையால் அவதி ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழி இல்லை: கொசுத்தொல்லையால் அவதி
ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழி இல்லை: கொசுத்தொல்லையால் அவதி
ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழி இல்லை: கொசுத்தொல்லையால் அவதி
ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழி இல்லை: கொசுத்தொல்லையால் அவதி
ADDED : ஜூன் 17, 2024 12:20 AM
சிக்கல் : சிக்கல் அருகே ஆய்க்குடியில் கழிவுநீர் செல்ல வழியின்றி துர்நாற்றம் வீசுகிறது. நோய்தொற்று அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
சிறைக்குளம் ஊராட்சி ஆய்க்குடியில் கடந்தாண்டு கிழக்கு கடற்கரைச் சாலை ஓரத்தில் புதியதாக கழிவுநீர் செல்வதற்கு வாறுகால்வாய் அமைக்கப்பட்டது.
பராமரிப்பு இல்லாமல் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் 200 மீ., நீளத்திற்கு வாறுகாலில் கழிவு நீர் தேங்கி உள்ளது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு பண்ணைகள் உருவாகி பகலிலும், இரவிலும் கடிக்கிறது.
ஒரு சில வீடுகளில் இருந்து கழிவறை கழிவுகளை இவற்றில் செப்டிக் டேங்காக பயன்படுத்துகின்றனர். இதனால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு கிராமத்தில் உள்ளோர் பாதிப்பை சந்திக்கின்றனர்.
எனவே சிறைக்குளம் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவு நீர் வெளியேறுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்தால் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.