Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வர்ணம் பூசப்பட்ட புதிய தார் ரோடு

வர்ணம் பூசப்பட்ட புதிய தார் ரோடு

வர்ணம் பூசப்பட்ட புதிய தார் ரோடு

வர்ணம் பூசப்பட்ட புதிய தார் ரோடு

ADDED : ஜூலை 02, 2024 06:12 AM


Google News
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார்--அபிராமம் ரோடு ஆற்றுப்பாலம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில் விபத்து ஏற்படாமல் இருக்க வர்ணம் பூசப்பட்டது.

முதுகுளத்துாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதுகுளத்துார்-- பரமக்குடி ரோடு வேளாண் சேமிப்பு கிடங்கு துவங்கி கண்மாய் கரை, அரசு மேல் நிலைப்பள்ளி வழியாக நீதிமன்றம் வரை முதற்கட்டமாக ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது.

தற்போது வேளாண் சேமிப்பு கிடங்கில் இருந்து செல்வநாயகபுரம் முக்குரோடு வரை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நீதிமன்றம் வரை ரோடு அமைக்கும் பணி ஓரளவு நடந்து முடிந்துள்ளது.

முதுகுளத்துார்- - அபிராமம் ரோடு ஆற்றுப்பாலம் அருகே ரோடு இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவில் கற்களால் கட்டப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள ரோட்டில் எந்த எச்சரிக்கை போர்டுகள், பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரத்தில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விபத்து ஏற்படாமல் இருக்க புதிய ரோடு தெரிவதற்காக கருப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us