/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு விழா மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு விழா
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு விழா
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு விழா
மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் கிடா வெட்டு விழா
ADDED : ஜூன் 02, 2024 03:40 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிடா வெட்டு மற்றும் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா மே 23ல் துவங்கிய நிலையில் தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பூச்சொரிதல் மற்றும் பூக்குழி விழா நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு கோயிலில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு நள்ளிரவு பூஜை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோயிலின் முன்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் பொங்கல் வைத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
மூலவருக்கு பொங்கல் வைத்து படையல் இட்ட பின் பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்திருந்த கிடாக்கள் நேற்று அதிகாலை பலியிடப்பட்டு கிடா வெட்டு விழா நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை விழாக் குழு தலைவரும், சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் நிதிக் குழு தலைவர் தனசேகரன் செய்திருந்தார்.