ADDED : ஜூலை 28, 2024 04:22 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டாங்குடியை சேர்ந்தவர் மார்கண்டன் 36. கொத்தனார் வேலை செய்தார், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பினார்.
ஆட்டாங்குடி போஸ்ட் ஆபீஸ் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மார்க்கண்டன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இறந்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.