Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் அருகே லாந்தையில் ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் இடம்: கோட்ட மேலாளர் ஆய்வு

ராமநாதபுரம் அருகே லாந்தையில் ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் இடம்: கோட்ட மேலாளர் ஆய்வு

ராமநாதபுரம் அருகே லாந்தையில் ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் இடம்: கோட்ட மேலாளர் ஆய்வு

ராமநாதபுரம் அருகே லாந்தையில் ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் இடம்: கோட்ட மேலாளர் ஆய்வு

ADDED : ஜூலை 10, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் அருகே லாந்தையில் ரூ.17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமையவுள்ள இடத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தவா ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் லாந்தை கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் அங்கு வந்த மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

அவர் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் லாந்தையில் ரயில்வே மேம்பாலம் ரூ.17.32 கோடியில் அமைக்க அனுமதி வழங்கியது. 2016 ல் துவங்கி முடிவடையாத நிலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணியும் முடிவடைந்தால் இந்தப்பகுதி மக்கள் சிரமம் இல்லாமல் ரயில் பாதையை கடக்க முடியும்.

இந்த சுரங்கப்பாதையில் குழாய்கள் பதிப்பது, லாந்தை பகுதியில் இணைப்புச்சாலை மற்றும் சுற்றுச்சுவர் எழுப்புதல் இணைப்பு சாலையோகரங்களில் சிறிய மழை நீர் வடிகால் அமைத்தல், மழை நீரை சேகரிக்க கிணறு அமைப்பது, சேகரிக்கப்பட்ட நீரை அருகேயுள்ள ரயில்வே பாலத்திற்கு கொண்டு செல்வது, மழை நீர் சுரங்கப்பாதைக்கு வராமல் தடுக்க கூரை அமைப்பது போன்ற பணிகள் நடக்க உள்ளது.

நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவஸ்தவா லாந்தை பகுதியில் ஆய்வு செய்தார். அவர் கூறுகையில் லாந்தை கிராமத்தில் ரயில் பாதையை கடக்க மேம்பாலம் அமைப்பது. அதனுடன் இணைந்து சுரக்கப்பாதை பணிகளை நிறைவு செய்தால் இந்தப்பகுதி மக்கள் சிரமம் இன்றி ரயில் பாதையை பாதுகாப்பாக கடந்து செல்ல முடியும். இதற்கான ஒத்துழைப்பை லாந்தை கிராம மக்கள் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us