ADDED : ஜூலை 04, 2024 01:17 AM

திருவாடானை: திருவாடானை அருகே பாரூர் கிராமத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., கோவிந்தன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிப்பது பெற்றோரின் கடமை. டூவீலர்கள் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை மீறி செல்லக்கூடாது அறிவுரைகள் வழங்கப்பட்டது.