/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம் சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
சட்ட விழிப்புணர்வு வாகனம் துவக்கம்
ADDED : ஜூன் 17, 2024 12:19 AM

திருவாடானை : திருவாடானை வட்ட சட்டபணிகள் குழு சார்பில், சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நீதிபதி பிரசாத் துவக்கி வைத்தார்.
சட்டத்தினை பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஜாமீனில் வெளியில் வருவது, பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் பற்றி தெரிந்து கொள்வது, முதியோர்கள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து ஜீவனாம்சம் பெறுவது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு ஆகியவற்றை வட்ட சட்ட பணிகள் குழுவில் மனுவாக அளித்து ஆலோசனை பெறும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து கிராமங்களுக்கு வாகனத்தில் சென்று விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கபட்டது.
வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், பங்கேற்றனர்.