/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விவசாயத்திற்கு தேவையான கருவிகள் இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு விவசாயத்திற்கு தேவையான கருவிகள் இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயத்திற்கு தேவையான கருவிகள் இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயத்திற்கு தேவையான கருவிகள் இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயத்திற்கு தேவையான கருவிகள் இல்லை: விவசாயிகள் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 20, 2024 04:26 AM
திருவாடானை: வேளாண் பொறியியல் துறையில் நிலத்தை சமப்படுத்தும் லேசர் லெவலிங் கருவி இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
விவசாயிகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் பிரச்னையாக இருப்பது ஆள் பற்றாக்குறை. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சியின் விளைவாக கிராமங்களில் வேளாண் பணிகளுக்கு ஆள் கிடைப்பதில்லை.
இதனால் விவசாயிகள் இயந்திரங்களை நாடத் துவங்கினர்.
விவசாய பணிகளுக்கு பயன்படும் பெரும்பாலான இயந்திரங்கள் வேளாண் பொறியியல் துறையால் வழங்கப்படுகிறது. நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, கடப்பாரை, இரும்பு சட்டி, களை கொத்து, மண்வெட்டி, கதிர் அரிவாள் உள்ளிட்ட பல கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
அதே நேரம் விவசாயிகளுக்கு தேவையான முக்கிய கருவிகள் இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது:
நிலங்களை நுட்பமாக சமப்படுத்துவதற்கான லேசர் லெவலிங் கருவி இல்லை. இக்கருவி மூலம் பயிர்களின் உற்பத்தி திறன் மற்றும் தரத்தை மேம்படுத்தலாம்.
நிலத்தில் நீர் சம அளவில் விநியோகம் ஆகும். பயிர்களின் வளர்ச்சி சீராக அமையும். வேளாண் பொறியியல் துறை சார்பில் இக்கருவி வழங்கப்படுவதில்லை.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயத்திற்கு பயன்படுத்தபட்டு வந்த மண் அள்ளும் இயந்திரம் துாத்துக்குடி வெள்ளத்தின் போது அங்கு கொண்டு செல்லப்பட்டது.
பல மாதங்கள் ஆகியும் இன்னும் அந்த இயந்திரம் ராமநாதபுரத்திற்கு வரவில்லை. இம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் துவங்க இரு மாதங்கள் உள்ளன.
அதற்குள் விவசாயிகளுக்கு தேவையான கருவிகள் மற்றும் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.