/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பெரிய நாகேஸ்வரர் கோயிலில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம் பெரிய நாகேஸ்வரர் கோயிலில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம்
பெரிய நாகேஸ்வரர் கோயிலில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம்
பெரிய நாகேஸ்வரர் கோயிலில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம்
பெரிய நாகேஸ்வரர் கோயிலில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 10, 2024 04:44 AM
ராமேஸ்வரம், : ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான பரமக்குடி மும்முடிசசாத்தான் பெரிய நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12ல் நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான பரமக்குடி அருகே உள்ள பெரியநாகேஸ்வரர் சுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் ரூ.41 லட்சத்தில் இரு ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்தது. இப்பணிகள் முடிந்த நிலையில் ஜூலை 12ல் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலைத்துறை முடிவு செய்தது.
அதன்படி கோயில் வளாகத்தில் யாகசால பூஜை நடத்தி ஜூலை 12ல் ராமேஸ்வரம் கோயில் குருக்கள் மந்திரங்கள் முழங்க பெரிய நாகேஸ்வரர், பெரியநாயகி அம்மன் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.