ADDED : மார் 14, 2025 07:03 AM
பெருநாழி: பெருநாழி அருகே வீரமாச்சான்பட்டி முத்தம்மாள் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு முத்தம்மாள் கோயிலின் விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.
மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.