ADDED : ஜூன் 17, 2024 12:19 AM
கீழக்கரை : -கீழக்கரை அருகே வைகையில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழா ஜூன் 13ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை 11:00 மணிக்கு கடம் புறப்பாட்டிற்கு பின் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
மூலவர்கள் விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, பத்திரகாளியம்மன், அக்னி வீரபத்திரர், அக்னி மாடன், சோனை கருப்பன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள்பலர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே முள்ளிமுனை வைரவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வரர், விநாயகர் பூஜைகள் நடந்தது.
யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்பு, மூலவர் பைரவருக்கு புனித நீர் அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவாடானை: திருவாடானை அருகே கலியனி கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
முன்னதாக சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த யாகசாலை பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து கற்பகவிநாயகர், முத்துமாரியம்மன் கோயில் கும்பங்களில் புனித நீர் ஊற்றபட்டது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.