ADDED : ஜூன் 17, 2024 12:16 AM

பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டை ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் காந்தாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவில் நேற்று காலை 10:30 மணிக்கு கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர்கள் சித்தி விநாயகர், காந்தாரியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.