ADDED : ஜூலை 13, 2024 04:32 AM
திருவாடானை : திருவாடானை அருகே கிழவண்டி, கோனேரிகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள இருளைய்யா கோயில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முன்னதாக நடந்த அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து சிவாச்சாரியார் ரவி குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க காலை 10:00 மணிக்கு கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அன்னதானம் நடந்தது.
விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.