/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு கண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு
கண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு
கண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு
கண்ணாயிர மூர்த்தி அய்யனார் கோயில் வடமாடு மஞ்சுவிரட்டு
ADDED : ஜூலை 11, 2024 04:58 AM

பெருநாழி: பெருநாழி அருகே ஆரைக்குடி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. கண்ணாயிர மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமிக்கு பூஜைகள் நடந்தது.
மைதானத்தில் நடந்த மஞ்சு விரட்டில் காளையின் ஒரு பக்க கயிற்றை தரையில் பாதுகாப்பாக கட்டி வைத்தும், மறுபக்க கயிற்றை அதன் கழுத்தில் கட்டியும் 12 மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடக்கிய வீரர்களுக்கு பரிசும், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 20 நிமிடங்கள் காளை பிடிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது. வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.