/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிேஷகம் கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிேஷகம்
கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிேஷகம்
கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிேஷகம்
கடம்பாகுடி உலகம்மாள் கோயில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 10, 2024 11:15 PM

திருவாடானை : திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் ஐந்து கோயில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.
திருவாடானை அருகே கடம்பாகுடி கிராமத்தில் விநாயகர், உலகம்மாள், சமயபுரம் முத்துமாரியம்மன், சேவுகப்பெருமாள் அய்யனார், பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய கோயில்களில் நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
முன்னதாக சிவாச்சாரியார் ஆதிரெத்தினம் தலைமையில் கணபதி பூஜை, முதல் கால பூஜை, பூர்ணாகுதி, இரண்டாம் கால பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 7:15 மணிக்கு சேவுகப்பெருமாள் அய்யனார், 9:00 மணிக்கு விநாயகர், சமயபுரம் மாரியம்மன், 10:00 மணிக்கு உலகம்மாள், பதினெட்டாம்படி கருப்பர் ஆகிய கோயில்களில் கருடபகவான் வானில் வட்டமிட கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அச்சங்குடி ஊராட்சி தலைவர் கணேசன், துணைத் தலைவர் செல்வி, ஊராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், கலாவதி, கீதா, ஆறுமுகம், திருநாவுக்கரசு, ஊராட்சி செயலர் இளங்கோ, மக்கள் நல பணியாளர் கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவை முன்னிட்டு கோயில்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.