/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு
ADDED : ஜூலை 21, 2024 04:33 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் பசும்பொன் நகரில் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 13.5 பவுன் நகைகளை திருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் ஜெயராம் 38. இவர் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.
இவரது மனைவி கங்கா 34, பசும்பொன் நகரில் வசிக்கிறார். இவர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு டிராவில் இருந்த வெற்றிலை பெட்டியில் இருந்து ஒரு தங்க செயினை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற நகைகளை டிராவில் வைத்து பூட்டி சாவியை அதிலேயே விட்டு விட்டார்.
வீட்டை பூட்டி சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியில் உள்ள காம்பவுண்டு கேட்டை பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் கொடுத்துள்ளார்.
கங்கா தனது தம்பி மனைவி குருலட்சுமியும் சேர்ந்து திருப்புவனம் மடப்புரம் காளி கோயிலுக்கு சென்றனர்.
மாலையில் பள்ளி முடிந்து திரும்பிய கங்கா மகள் பக்கத்து வீட்டில் சாவியை வாங்கி திறந்து வீட்டில் இருந்துள்ளார்.
கோயிலுக்கு சென்று இரவு திரும்பிய கங்கா மறுநாள் காலை 4:30 மணிக்கு செயினை கழற்றி டிராவில் வைக்க சென்ற போது டிராவில் இருந்த 13.5 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதன் மதிப்பு ரூ.5 லட்சம். கங்கா புகாரில் ராமநாதபுரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.