/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோட்டை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோட்டை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோட்டை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோட்டை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோட்டை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை
ADDED : ஜூலை 05, 2024 01:38 AM

ராமேஸ்வரம்:தனுஷ்கோடி அருகே ஜடாயு தீர்த்தம் சிவன் கோவில் ரோடை சீரமைக்க வனத்துறை முட்டுக்கட்டை போட்டு உள்ளது.
ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு தனுஷ்கோடி வரும் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதற்கு நிவர்த்தி காண சிவபெருமான் தலையில் இருந்து வரும் கங்கை நீரில் உருவான ஜடாயு தீர்த்தத்தில் ராமர் புனித நீராடியதும் பாவங்கள் நீங்கி புதுபொலிவு பெற்றதாக ஐதீகம்.
சிவன் தலையில் இருந்து உருவான தீர்த்தம் என்பதால் 'ஜடாயு தீர்த்தம்' என பெயரிட்டனர். இத்தீர்த்தம் தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடக்கில் 1 கி.மீ.,யில் உள்ளது. எதிரில் சிவன் கோவிலும் உள்ளது.
இக்கோவிலுக்கு 2004ல் ராமேஸ்வரம் நகராட்சி தார் ரோடு அமைத்தது. ஆனால் ஜடாயு தீர்த்தம் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் நடுவில் உள்ளதால் இப்பகுதியை காப்புக் காடு என வனத்துறை அறிவித்தது.
இதனால் இந்த ரோட்டை புதுப்பிக்க வனத்துறை முட்டுக்கட்டை போட்டது. தற்போது ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது.
இதனால் பக்தர்கள் செல்ல முடிவதில்லை. உள்ளூர் பக்தர்கள் சிலர் மட்டுமே வருகின்றனர். இந்நிலை நீடித்தால் இக்கோவில் வரலாறும், புனிதமும் பக்தர்களுக்கு தெரியாமல் போய் விடும் அபாயம் உள்ளது.
எனவே, வரலாற்று பெருமை கொண்ட கோவிலுக்கு செல்லும் ரோட்டை புதுப்பிக்க வனத்துறை விலக்கு அளிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.