/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சிறைக்குளம் ஊராட்சி அலுவலகம் பணி தரமற்று நடப்பதாக புகார்; மகளிர் மன்றத்தினர் வேதனை சிறைக்குளம் ஊராட்சி அலுவலகம் பணி தரமற்று நடப்பதாக புகார்; மகளிர் மன்றத்தினர் வேதனை
சிறைக்குளம் ஊராட்சி அலுவலகம் பணி தரமற்று நடப்பதாக புகார்; மகளிர் மன்றத்தினர் வேதனை
சிறைக்குளம் ஊராட்சி அலுவலகம் பணி தரமற்று நடப்பதாக புகார்; மகளிர் மன்றத்தினர் வேதனை
சிறைக்குளம் ஊராட்சி அலுவலகம் பணி தரமற்று நடப்பதாக புகார்; மகளிர் மன்றத்தினர் வேதனை
ADDED : ஜூலை 08, 2024 06:08 AM
சிக்கல்: சிக்கல் அருகே சிறைக்குளம் ஊராட்சியில் அலுவலகம் தரமற்று கட்டப்படுவதாக மகளிர் மன்ற நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்.
சிக்கல் ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி நடக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட கட்டுமானப் பணிகளில் கட்டடத்திற்கு பயன்படுத்தப்படும் மணல் தரமற்று இருப்பதாகவும், கான்கிரீட் பூச்சுக்கள் தரமின்றி பெயரளவில் கட்டப்படுவதால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறைக்குளம் மகளிர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது:
ஊராட்சி அலுவலகம் பணிகள் நடப்பது குறித்த திட்ட மதிப்பீட்டுத் தொகை விபரப்பலகை வைக்கப்படவில்லை.
இதன் அருகே மணல் கொட்டப்பட்டுள்ளது. அதில் குப்பை சேர்ந்துள்ள நிலையில் உரிய முறையில் சுத்தம் செய்யாமல் மணலை பயன்படுத்துகின்றனர்.
எனவே கடலாடி யூனியன் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கட்டுமானப் பணியை உரிய முறையில் ஆய்வு செய்ய வேண்டும். தரமற்று கட்டப்படுவதால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது என்றனர்.