/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா
சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா
சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா
சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா
ADDED : ஜூன் 14, 2024 04:33 AM

ராமநாதபுரம்: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி ராமநாதபுரத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்க விழா நடந்தது.
ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குமரகுரு சட்டவிழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தார். பெண்கள், குழந்தைகள், தொழிலாளிகள் என மக்கள் யாராக இருந்தாலும் இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம்.
15100 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம். இதுகுறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தமராஜ், விரைவு மகிளா மாவட்ட நீதிபதி கோபிநாத், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி அகிலாதேவி, நீதித்துறை நடுவர் எண் 1 நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண் 2 பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி வெர்ஜின் வெஸ்டா மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக்இப்ராஹிம் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.